
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகரும் 2022 பிகேஆர் கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பொறுப்புக்கு கட்சியின் தேசிய தலைமை மற்றும் கட்சி உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் களம் கண்டு வருபவருமான டாக்டர் ஜி.குணராஜ், மக்கள் நலப் பணிக்காக நிறுவியுள்ள செந்தோசா மக்கள் சேவை மையத்தின் சார்பில் தொகுதிவாழ் மக்களுக்கான சேவையை தொய்வின்றி தொடர்ந்து வருபவர்; இதில் கல்வி தொடர்பான பணியும், குறிப்பிடத்தக்கது.

கல்லாத மனிதர்கள் களர் நிலத்திற்கு சமம் என்னும் சிந்தனையின் அடிப்படையில், செந்தோசா சட்டமன்ற சேவை மையமும் ஏஎஸ்டி அமைப்பும் இணைந்து ‘ஏஎஸ்டி பாலர் பள்ளி’யைத் தொடங்குகின்றன. 4 முதல் 6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைக்குமுன் அவர்கள் அடிப்படைக் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இந்த பாலர் பள்ளி தொடங்கப்படுகிறது.
பி-40 தரப்பு குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது. இதன் தொடர்பில் அறிமுக விழாவும் தொடக்க விழாவும் ஒருசேர இன்று ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 முதல் 6:00 மணிவரை நடைபெற உள்ளது.
Klang, Taman Sentosa, Jalan Dato Dagang 17A-என்னும் இடத்தில் அமைந்துள்ள ஏஎஸ்டி மக்கள் பாலர் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளும்படி செந்தோசா மக்கள் சேவை மையத்தின் சார்பில் அழைக்கப்படுகின்றனர்.
