
சிலாங்கூர் மாநில வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப அதிகத் திறன் கொண்டவர்களாக அவர்களை உருவாக்கவும் அதேவேளைஅவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் மாநில அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மற்றும் சேவைத் துறை, கட்டுமானம், சுகாதாரம் உள்ளிட்ட பிற துறைகளின் மூலம் மாநில வளர்ச்சிக்கு உதவியாக, 3.6 மில்லியன் தொழிலாளர்கள் முதுகெலும்பாக இருப்பதாகவும் சிலாங்கூர் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே காரணம் என்றும் அமிருடின் மேலும் தெரிவித்துள்ளார்.
