26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

போதுமான கடப்பிதழ்கள் உள்ளன:
-குடிநுழைவுத் துறை

நாட்டின் குடிநுழைவு அலுவலகங்களில் மலேசிய பன்னாட்டு கடப்பிதழ்கள் போதுமான அளவில் உள்ளன என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud தெரிவித்துள்ளார்.

புதிய கடப்பிதழுக்காகவும் பழைய கடப்பிதழைப் புதுப்பிக்கவும் அண்மைக் காலமாக, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமானோர் குவிந்து வருகின்றனர். இந்த திடீர் அதிகரிப்பு 65% அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், இதை சமாளிக்கும் அளவுக்கு 1.2 மில்லியனுக்கும் மேலான கடப்பிதழ்கள் கையிருப்பில் உள்ளதால், கவலை இல்லை; தேவையெனில், இன்னும் அதிக கடப்பிதழ் கேட்டு சம்பந்தப்பட்ட விநியோகிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் Khairul Dzaimee Daud சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles