25.6 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

நிதி அமைச்சர் அம்னோ வேட்பாளராக
களம் இறங்க விரும்பினால் கடுமையாக உழைக்க வேண்டும்

🔥 Views : 28
👁 Reading Now : 54

15-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிட நிதி அமைச்சர் தெங்கு ஸப்ருல் அசிஸ் விரும்பினால், அதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வங்கியாளரான தெங்கு ஸப்ருலால், அம்னோ வெற்றிக்கு பங்காற்ற முடியும்; அதேவேளை, அவர் முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. அதற்கு, அந்தத் தொகுதியின் வட்டாரத் தலைவர்களும் கட்சியினரும் முதலில் ஆதரவு தெரிவிக்க வேண்டும். எனவே, தெங்கு ஸப்ருல் களப்பணியை மேற்கொண்டு வந்தால், பின்னர் கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles