24.5 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

15-ஆவது பொதுத் தேர்தல் சவால் மிக்கது:
-ஜசெக

🔥 Views : 28
👁 Reading Now : 33

நாடு விரைவில் எதிர்கொள்ள இருக்கும் பொதுத்தேர்தல், ஜசெக-வைப் பொறுத்தவரை கடும் சவாலாக இருக்கும் என்பது உண்மைதான் என்று ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்தவர்களில் ஒரு தரப்பினர், கடந்த ஈராண்டு அர்சியல் நிலவரங்களைக் கண்டு சளிப்படைந்து தேசிய முன்னணி பக்கம் சாயலாமா என்ற மனநிலையில் உள்ளனர். ஆனாலும், இவர்கள் மதில்மேல் பூனை வாக்காளர்கள்தான்.

ஜசெக-வின் அடிப்படை ஆதரவு அப்படியே நிலைபெற்றுள்ள நிலையில், இந்த மதில்மேல் பூனை வாக்காளர்களைக் கவர்வது உண்மையில் பெரும் சவால்தான் என்று அண்மையில் சபாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட சிரம்பான் மக்கள் பிரதிநிதியுமான அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles