24.5 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

இரக்கமில்லாத கொலையாளிக்கான மரண தண்டனை
தொடர வேண்டும்

🔥 Views : 22
👁 Reading Now : 20

கடுங்குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை கட்டாயமில்லை என்ற கட்டத்திற்கு நகர அரசு எடுத்துள்ள முடிவு சரிதான் என்றாலும் தயவு தாட்சணியம் இன்றி கொடூரக் கொலைபுரியும் தரப்பினருக்கு விதிக்கப்படும் மரண தண்டனை தொடரத்தான் வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராமல் கொலை நேர்ந்துவிடுவது சிற்சில வேளைகளில் இடம்பெறுவது உண்மைதான் என்றாலும், கொலை செய்வதென்று திட்டமிட்டே குற்றம் புரியும் கருணை மனம் இல்லாதவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தத் தரப்பினருக்கு கருணை காட்டி என்ன ஆகப் போகிறது என்ற கருத்தை அந்தத் தரப்பினர் முன்வைக்கின்றனர்.
இரக்கமும் மன்னிக்கும் மனப்பாங்கும் நாகரிகம் அடைந்த சமூகத்திற்கு தேவைதான் என்றாலும் கொலை செய்வதில் எந்த கவலையும் இல்லாத இந்த தீவிர குற்றவாளிகளை கையாளும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles