25.4 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

இந்திய, பாகிஸ்தான் தொழிலாளர்களையும் பரிசீலிக்கும்படி தோட்ட முதலாளிகளுக்கு ஸுரைடா பரிந்துரை

🔥 Views : 19
👁 Reading Now : 23

இந்தோனேசிய, வங்காள தேச தொழிலாளர்களை மட்டும் சார்ந்திருக்காமல் இந்திய, பாகிஸ்தானிய தொழிலாளர்களையும் மலேசிய செம்பனைத் தோட்ட முதலாளிகள் பரிசீலிக்க வேண்டும் என்று மூலப் பொருள் தொட்டத் தொழில் அமைச்சர் டத்தோ ஸுரைடா கமாருடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகூட, ஒரு தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்க வேண்டுமேத் தவிர, நீண்ட காலத்திற்கு இந்த நிலைத் தொடரக்கூடாது. அதேவேளை, தற்போது தொட்டத் தொழில் துறை, ஆள்பல பற்றாக்குறையால் தடுமாற்றம் கண்டுள்ளது என்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

தோட்டத் தொழில்துறையை இயந்திர மயமாக்கினால், அது உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவரக் கூடும். எனினும், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர் பற்றாகுறையை எதிர்கொண்டுள்ள தோட்டத் தொழில்துறை குறித்து மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சகம், குடிநுழைவுத் துறை, கூட்டுறவு ஆணையம் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் ஸுரைடா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles