25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

அரசியல் தவளைகளின் தொல்லை நாட்டில் ஓயவில்லை;
துணை சபாநாயகர் Rashid Hasnon மீண்டும் தாவப்போவது வதந்தியாம்:

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கெடுத்ததுடன், 60 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் விரும்பிய மாற்றத்தையும் சீர்குலைத்த தவளைகள் கொல்லைப் புற ஆட்சிகளை அடுத்தடுத்து அமைக்க துணைபோயின.

அந்த மட்டில் ஓய்ந்து போனதுகளா என்றால் இல்லை; இப்பொழுது 15-ஆவது தேர்தல் நெருங்குவதால், இனியும் பெர்சத்துக் கட்சியை நம்பிப் பயனில்லை என்று கருதும் இந்த அற்ற குலத்து அருநீர்ப் பறவைகள், இப்பொழுதே வேற்றுக் கட்சிக்கோ அல்லது பழையக் கட்சிக்கோத் தாவி பாதுகாப்பான தொகுதியையும் அரசியல் பயணத்தையும் உறுதிசெய்ய மீண்டும் இருட்டு வேளையில் திருட்டுப் பேச்சு நடத்துகின்றன இந்தத் தவளைகள்.

ஆனால், நாங்கள் ஸுரைடாவைப் போல மீண்டும் அணி தாவ மாட்டோம்; பெர்சத்துவிலேயே நிலைத்திருப்போம்; ஆனாலும் நாங்கள் அணி தாவ இருப்பதாக வெளிவரும் தகவல் பொய்யென்றும் வதந்தி என்றும் நேற்று அஸ்மின் அலியும் இன்று Rashid Hasnon அறிக்கை வெளியிட்டுள்ளன.

மலேசிய அரசியலில் தவளைகளின் தொல்லை எப்போது ஓயுமோ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles