26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

வெள்ளச் சூழலைப் பயன்படுத்தி தன்னாற்வச் சுற்றுலாவா?
-நஸ்ரி அஜீஸை சாடிய பகாங் ஜசெக

🔥 Views : 15
👁 Reading Now : 20

நாட்டில் ஏற்படும் வெள்ளச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ‘தன்னார்வ சுற்றுலாவை’ மேம்படுத்தலாம் என்று சுற்றுலா-பண்பாட்டு வளர்ச்சித் துறையின் முன்னாள் அமைச்சர் நஸ்ரி அஜீஸ் தெரிவித்த ஆலோசனைக்கு பகாங் மாநில ஜசெக மறுப்பும் விமர்சனமும் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கான யோசனை, பரிந்துரைகளை படாங் ரெங்காஸ் எம்பியுமான அவர் அவ்வப்பொழுது முன்வைத்தாலும், வெள்ளச் சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாவை தன்னார்வ அடிப்படையில் மேம்படுத்துவது என்னும் கருத்து, யதார்த்த நிலையிலிருந்து அவர் வெகு தொலைவில் இருப்பதைக் காட்டுவதாக பகாங் இளம் தலைவரான Syefura Othman கூறியுள்ளார்.

வெள்ளத்திற்குப் பின் துப்புரவு மற்றும் தூய்மைப் பணியில்தான் உதவ முடியும்; சில வேளைகளில், அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை ஈடுகட்ட பொருளாதார உதவி தேவைப்படும்; ஒருவேளை உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நிலைமை இன்னும் பாரதூரமானது. இப்படிப்பட்ட சூழலில், சுற்றுலாவை எப்படி மேம்படுத்துவது என்றெல்லாம் கேள்விக் கணைகளை அசீஸுக்கு எதிராக பாய்ச்சி இருக்கிறார் Syefura Othman.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles