30.5 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

மாரா அறிவியல் இளநிலை கல்லூரியில் வன்முறை
20 முன்னாள் மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

🔥 Views : 22
👁 Reading Now : 31

MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரியின் மாணவர் ஒருவரை தாக்கியதாக அக்கல்லூரியின் 20 முன்னாள் மாணவர்கள் மீது சுங்கைப் பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2020, அக்டோபர் மாதம் 27ஆம் தேதி பின்னிரவு 12:30 மணிக்கும் அதிகாலை 2:30 மணிக்குமிடையே அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் Nadhirah Abdul Rahim முன்னிலையில் குற்றம் சாட்டப்-பட்டனர்.

18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அவர்களின் நன்னடத்தை அறிக்கைக்காக நீதிமன்றம் காத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles