30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பேராக் ஆட்சியாளர் – சிங்கை பிரதமர் சந்திப்பு

🔥 Views : 24
👁 Reading Now : 27

மலேசியாவுடன் பாரம்பரிய நட்பைத் தொடரும்வேளை, பேராக் மாநில அரசாங்கத்துடனான உறவு இன்னும் வலுவானது என்றும் சிங்கப்பூர் அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது எனவும் மலேசிய ஆட்சியாளர் நஸ்ரின் ஷா சுல்தானை நேற்று சந்தித்தபின் சிங்கை பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் லீ-யின் அழைப்பை ஏற்று 4 நாள் பயணம் மேற்கொண்ட பேராக் ஆட்சியாளரருடன் பேராக் மாநில இஸ்லாம் சமய-மலாய் பண்பாட்டுக் குழுத் தலைவர் Mohd Annuar Zaini-யும் உடன் சென்றார்.

பேராக் மாநிலமும் சிங்கப்பூரும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் மண்டல அளவிலான வளர்ச்சியிலும் இருதரப்பும் இணைந்து பயணிக்கலாம் என்று லீ தெரிவித்துள்ளார். பன்னாட்டு எல்லைகள் திறக்கப்பட்ட பின் சிங்கைக்கு முதல் முறையாக சென்றுள்ள பேராக் ஆட்சியாளருடனான இந்தச் சந்திப்பின்போது, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles