25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

நாட்டின் பணவீக்கம் உலக நாடுகளில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும்போது, ஜிஹாட் தேவையா?

தகவல், பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் பணவீக்கத்தை எதிர்க்கும் பணிக்குழு எதையும் சாதிக்கப் போவதில்லை என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸாய்ட் இப்ராஹிம்(Zaid Ibrahim) சாடியுள்ளார். அனுவார் மூசா கூறும்போது உலக நாடுகளில் மலேசியாவில் மட்டுமே ஆகக் குறைந்த பணவீக்கம் இருப்பதாகக் கூறியிருக்கும் வேளையில், பணிக்குழு எதைச் சாதிக்கப் போகிறது என்று அவர் கேலி பேசினார். அதில் அமைச்சர்கள் மட்டுமே உறுப்பியம் பெற்றிருப்பதால், அமைச்சரவைக் கூட்டத்திலேயெ அதனை விவாதிக்கலாம் என்றும் நமது அமைச்சர்களை விட வெளியில் தகுதியான தலைசிறந்த நிபுணர்கள் இருப்பதை மறந்தது ஏனோ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles