25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

அம்னோவின் உட்கட்சி மோதல் மக்களின் நம்பிக்கையை இழக்க வைக்கும்-ஹிஷாமுடின் ஹுசேய்ன் எச்சரிக்கை

தலைவர்கள் தொடர்ந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், அம்னோ, தேசிய முன்னணியின் மீதான மக்களின் நம்பிக்கை சரியும் என்று செம்புரோங் தொகுதி அம்னோ தலைவரான Hishamudin Husein (ஹிஷாமுடின் ஹுசேய்ன்) எச்சரித்தார்.
கட்சியில் பிளவானது அதன் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும் வரும் பொதுத்தேர்தலில் கட்சிக்குச் சரிவைக் கொண்டுவரும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும், முன் அனுபவத்தைக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மான்(Tajudin Abdul Rahman) உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, கட்சியின் மீதும் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் மீதும் புழுதி வாரி இரைத்து வருகிறார்.
இது கட்சியில் பிரிவினையை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles