
போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெக்கான உதவி நிதியை அகற்றியது வசதி குன்றிய மக்களுக்குப் பெரும் துன்பத்தை அளிக்கும் என்று காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Dato Abdullah Sani Abdul Hamid (டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹாமிட்) குறிப்பிட்டார்.
மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு தகுந்த அக்கறை காட்டவில்லை என்பது இதன் மூலம் புலனாவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பறித்தவர்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் திண்டாடுவதாக அவர் சாடினார்.
பெட்ரோலின் மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருமானத்தை மக்களுக்கு உதவி நிதியாகக் கொடுப்பதால், மத்திய அரசுக்கு நட்டம் ஏதும் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
