
அண்மைய காலங்கில் வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களின் பணம் அவர்களுக்குத் தெரியாமல் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கெ ஆடிலானின் பொருளாளர் Lee Chean Chung (லீ சீயன் சுங்) குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வாடிக்கையாளர் ஒருவரின் 170,000 ரிங்கிட் இருப்பு, அவருக்குத் தெரியாமல் மீட்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் அனுமதியின்றி அப்பணம் மீட்கப்பட்டதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட வங்கி இன்னமும் விளக்கமளிக்க முடியவில்லை.
இதனை Bank Negara (பேங்க் நெகாராவுக்கு) எழுத்து மூலமாகத் தெரிவித்தபோதும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்குத் தக்க பதில் இல்லையென்றால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்து பேங்க் நெகாரவின் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.
