
வசதி குறைந்த மக்களின் பிரிவில் தரம் இறங்கி இருக்கும் எம்40 குடும்பங்களுக்குப் பொருள்களுக்கான உதவி நிதியை வழங்குவதை விட ரொக்கப் பணமாக அரசு வழங்க வேண்டுமென பூமிபுத்ரா சில்லரைக் கழகத்தின் தலைவர் Ameer Ali Mydin (அமீர் அலி மைடின்) கேட்டுக் கொண்டார்.
நீண்ட காலத்திற்கு விலைக் கட்டுப்பாடும் உதவிநிதியும் அமலில் இருந்தால், அது பொருளாதார மந்த நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எம்40 பிரிவு மக்களுக்கு அரசின் உதவி தேவைப்படுவதால், அவர்களுக்கான உதவி நிதியைக் குறைத்துவிட்டு, ரொக்கப் பணத்தை வழங்க வேண்டுமென அமீர் அலி கேட்டுக் கொண்டார்.
தற்போது வழங்கப்படும் Bantuan Keluarga Malaysia பிகேஎம் உதவி நிதியை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர்களுக்கான உச்சக்கட்ட சம்பள விகிதத்தை 4,000லிருந்து 6,000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், 4 அல்லது 5 பிள்ளைகளோடு இருக்கும் பெற்றோருக்கு மாதம் ஒன்றுக்கு 4,500 ரிங்கிட் தேவைப்படுவதால், அரசின் 100 ரிங்கிட் உதவித் தொகை போதாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
