25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

45,000 பேருக்கு விமானக் கழிவுக்கான வவுச்சர்கள்

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் உள்நாட்டு சுற்றுப் பயணங்களை ஊக்குவிக்க 100 ரிங்கிட்டிலான இலவச (Voucher) வவுச்சர்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வவுச்சர்கள் 25லிருந்து 100 ரிங்கிட் மதிப்புடையவை என்றும் மொத்தம் 45,000 பேருக்கு அது வழங்கப்படும். உள்நாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட்டை இணையதளத்தின் மூலம் வாங்கும்போது அதனைப் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது 10,000 பேருக்கு 100 ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்களை மலேசிய ஏர்லைன்சும், 4,000 பேருக்கு 50 ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்களை (Firefly) ஃபயர்பிளையும், (Batik Air) பாத்திக் ஏரும், 25 ரிங்கிட் மதிப்பிலான 4,000 பேருக்கான வவுச்சர்களை மாஸ் ஸ்விங்ஸும்( MASWINGS) வழங்கும். ஏர் ஆசியா(Air Asia) 23,879 பேருக்கு 50 ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்களை வழங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles