
அம்னோவை களங்கப்படுத்தி அன்வாருக்கு (Tajiddin Abdul Rahman) தாஜுடின் அப்துல் ரஹ்மான் ஆதரவு தேடுவதாக கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்க்காசி(Puad Zarkasi) குற்றம் சாட்டினார். ஸாஹிட்டின் மீதான அவரின் குற்றச்சாட்டுகள் தீய நோக்கம் கொண்டவை, அம்னோவை சிறுமைப்படுத்துவதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்க அவர் சத்திய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டது, அரசாங்கத்தை மாற்றி, அமைச்சராகும் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தாஜுடின் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஒப்பந்தத்தை சுயநல நோக்கோடு ஆதரிப்பதாக புவாட் சாடினார். அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி அன்வாரை சந்தித்தது அகன்ற கூட்டணியை அமைப்பதுதான் நோக்கமாகும். எனினும், அது பக்காத்தான் ஹராப்பானுடனும் ஜசெகவுடனும் கூட்டுறவு வைத்துக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம் தாஜுடின் அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
