
நாட்டு மக்கள் விலைவாசியால் மேலும் சுமையை அனுபவிப்பதற்கு முன்னர், 15ஆவது பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமென்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Asyraf Wajdi Dusuki (அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி) கேட்டுக் கொண்டார்.
தற்போதைய அரசாங்கம் நிலையற்றதாகவும் பணவீக்கம் மக்களைத் தாக்கத் தயாராக இருப்பதாலும், பொருள்களின் விலையேற்றத்தை மக்கள் இனிமேலும் சுமக்க முடியாத நிலையில் இருப்பதால், 15ஆவது பொதுதேர்தலை இன்னும் இரு மாதங்களில் நடைபெறும் என்று தாம் கணித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
5 ஆண்டுக்கான தவணைக் காலம் அடுத்தாண்டு ஜூலையில் காலாவதியாகும் என்றும் அதற்குள் மக்கள் புதிய ஆட்சிக்கு தங்களின் கட்டளையை அளித்து, நிலையான ஆட்சியை அமைத்து, விலைவாசி பிரச்சினைகளூக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது ரஷியா-உக்ரேய்ன் போரினால், இறக்குமதி செய்யப்படும் சோயாபீன் தானியத்தின் விலை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிலையான ஆட்சி அமைந்தால்தான் வெளிநாட்டு மூலதனம் தாராளமாக நாட்டுக்குள் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
