25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

பலவீனமான பெர்சத்து ஜிஆர்எஸ்ஸைச் சார்ந்திருக்கிறது

தேசிய அளவில் வலு குன்றியிருக்கும் Bersatu (பெர்சத்து) கட்சி, சபாவில் காபுங்கான் ராக்யாட் சபாவிவின் ஆதரவோடு செயல்படுவதாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள பெர்சத்து தலைவர்கள் கட்சியின் பெயரை உச்சரிக்க விரும்புவதில்லை என்றும் பாஸ் கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் தனது சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபாவில் பெர்சத்து நிலை குன்றி இருப்பதாகவும் அதே போன்று, வாரிசானின் பலமும் சரிந்து வருகிறது.
சபாவில் செயல்படும் GRS (ஜிஆர்எஸ்ஸில்) Sabah Bersatu ( சபா பெர்சத்து), Party Bersatu Sabah (பார்ட்டி பெர்சத்து சபா-(பிபிஎஸ்), Sabah Progressive Party (சபா புரோகிரெஸ்ஸிவ் பார்ட்டி), Party Solidarity Tanah Air ku (பார்ட்டி சொலிடேரிட்டி தானா ஆயர்கூ), United Sabah National Organaisation(யுனைடெட் சபா நேஷனல் ஓர்கனைசேஷன்) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
ஜிஆர்எஸ்ஸும் தேசிய முன்னணியும் சபாவில் கூட்டணியாகும். தீபகற்ப மலேசியாவின் மாற்றத்தை ஒட்டியே, சபாவில் ஆட்சியின் செயல்பாடும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தீபகற்ப மலேசியாவில் தேசிய முன்னணி பலமாக இருப்பதால், சபாவிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நஜிப் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles