
போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான உதவிநிதியை அரசு அகற்றியது வசதி குறைந்த குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் என்று லூமுட் நாடாளுமன்ற உறுப்பினர் (Dr Mohd Hatta Ramli) டாக்டர் முகமட் ஹத்தா ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
அந்த நடவடிக்கைக்கு அரசு பல்வேறு சாக்குப்போக்குகளை அளித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ராணுவத்தினர் வேலையிடங்களில் காய்கறிகளைப் பயிரிட வேண்டுமென அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Izham Hashim (இஷாம் ஹாஷிம்) கூறும்போது, சிலாங்கூர் அரசு கோழியின் விலையை அதிகரிக்கவிடாமல் கட்டுக்குள் வைத்திருக்கும்போது, மத்திய அரசு அதனைச் செய்யாமல் இருப்பது அதன் மெத்தனத்தைக் காட்டுவதாகவும் வரும் பொதுத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
