
மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க முடியாத அரசு செயலற்றதாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிம் கடுமையாகச் சாடினார்.
நோன்புப் பெருநாள் முடிந்து ஈகைத் திருநாள் வரும் வேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணிக் குழுவை அமைத்திருப்பது எந்தப் பலனையும் கொண்டுவரப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோழியின் விலை கிலோவுக்கு 13லிருந்து 14 ரிங்கிட்டுக்கு உயர்ந்தபோது இந்தக் குழு அமைக்கப்பட்டதானது அரசின் மெத்தனத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடந்த கெ அடிலானின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அடுத்த பொதுத்தேர்தலிலும் பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூரில் ஆட்சி அமைக்கும் என்றும் ஜசெகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால், சிலாங்கூர் அரசு இஸ்லாத்துக்கு எதிரானது என்ற கூற்று அபத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
