25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

விலைவாசியை எதிர்த்து மிகப் பெரிய அளவிலான போராட்டம்

தற்போது நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி, மலிந்து வரும் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து அமானா மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அதன் தலைவர் Mohamad Sabu (முகமட் சாபு) எச்சரித்தார்.
இந்தப் போராட்டத்தில் பெர்சே அமைப்பு உட்பட பல அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அரசு செவிசாய்ப்பதே இல்லை என்றும் அதனை எதிர்த்து, விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படுவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும், அது இவ்வாண்டிலேயே நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், விலைவாசி பிரச்சினைக்கு அரசு ஜூலை 16க்குள் தீர்வுக்கான பரிந்துரையை அறிவிக்க வேண்டுமென்றும் தவறினால், போராட்டம் வெடிக்கும் என்று அமானா ஒருங்கிணைப்பாளர் Sany Hamzan (சானி ஹம்ஸான்) எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles