25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

வேலை முடிந்த பணிப் பெண்கள் ஹாஸ்டலில் தங்க அனுமதி வேண்டும்

வீட்டுப் பணிப்பெண்கள் தங்களின் அன்றாட வேலை முடிந்த பின்னர், அன்றையை இரவை குறிப்பிட்ட தங்குமிடத்தில் கழிக்க அரசு புதிய விதிமுறையை உருவாக்க வேண்டுமென கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago (சார்ல்ஸ் சந்தியாகோ) வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் வேண்டத்தகாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே, பணிப்பெண்களின் நலனில் முக்கியத்துவம் கொடுத்து 1955ஆம் ஆண்டு தொழிலியல் சட்டத்தில் அரசு சில விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, பணிப்பெண்களுக்கு பிரசவ சலுகை, வேலை நேர வரையறை, வருடாந்திர விடுப்பு, வேலையிலிருந்து விலகும் நிபந்தனை, ஓய்வூதிய அனுகூலங்கள் முதலியவை அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles