
பண வீக்கத்தையும் விலைவாசியையும் எதிர்த்து நடத்தப்படும் வீதிப் போராட்டங்களால் விளையப் போவது எதுவுமில்லை என்று ஜீஹாட் எனும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
பல நாடுகளில் 9லிருந்து 10 விழுக்காடு வரை பண வீக்கம் இருக்கும்போது, அங்கெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படாமல், 2.9 விழுக்காடு மட்டுமே பண வீக்கம் இருக்கும் மலேசியாவில் அது நடத்தப்படுவது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சனிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 8 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
