25.3 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

நாசி லெமாக் வியாபாரியின் மீது தங்க முதலீட்டுத் திட்ட மோசடிக் குற்றம்

நாசி லெமாக் வியாபாரி Wan Noraini Wan Abdullah (வான் நொராய்னி வான் அப்துல்லாவின்) மீது தங்க முதலீட்டில் மோசடி செய்ததாக அவர் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த குற்றங்களை அவர் கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து இவ்வாண்டு ஜனவரி வரை புரிந்து, 161,073 ரிங்கிட்டை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் Ainis Hasan Shaari ஐனிஸ் அபு ஹசான் ஷாரியின் முன்னிலையில் 12 குற்றச்சாட்டுகளும் இன்னொரு நீதிமன்றத்தில் நீதிபதி Nurul Farahah Mohd Suah நுருல் ஃபராஹா முகமட் சுவாவின் முன்னிலையில் 13 குற்றச்சாட்டுகளூம் சுமத்தப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் 900 லிருந்து 11,500, 12,100 ரிங்கிட்டுகளை தவணை முறையில் வசூல் செய்து, ஏமாற்றியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
24,000, 48,000 ரிங்கிட் பிணையில் அவர் இரு நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்டார். அவரின் வழக்கு ஜூலை 21லிருந்து ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles