
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் அங்கு வியாபாரம் செய்யும் உணவு அங்காடிக் கடைகளின் குத்தகைக் கட்டணம் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் Noraini Ahmad நோரைனி அமாட் தெரிவித்தார்.
அதே வேளையில், மாணவர்களுக்கு விற்கப்படும் தரமான உணவு 3 லிருந்து 4 ரிங்கிட்டுக்கு மேல் இருப்பதை அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் தெரித்தார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் வளாகங்களில் இருந்து வெளியே செல்ல பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை பணவீக்கம், விலைவாசி ஏற்றம் சம்பந்தமான பல்கலைக்கழக மாணவர்களின் போரட்டத்தில் ஒரு வேளை உணவுக்கு தாங்கள் 10 ரிங்கிட்டுக்கு மேல் செலவிடுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
