
அண்மையில் 38,2 மில்லியன் ரிங்கிட் பெறுமான உதவி நிதி பெற்ற உணவுப் விற்பனையில் மோசடி நடைபெற்றதை அடுத்து போலீஸும் ஊள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் அமைச்சும் அவற்றை பறிமுதல் செய்துள்ளன.
அதில் 850,000 ரிங்கிட் உதவிநிதி பெற்ற போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜூலை 1 முதல் 2, 3, 5 கிலோ எடை கொண்ட சமையல் எண்ணெய்க்கான உதவி நிதியை அரசு ரத்து செய்தது.
மேலும், உதவி நிதி பெறும் 1 கிலோ போலிபேக் சமையல் எண்ணெய்க்கு அரசு 400 கோடி ரிங்கிட்டை செலவிடுவதாகவும் அதன் விநியோக நடைமுறை ஆய்வு செய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.
