
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் அவரது அமைச்சர்களும் அதிகாரிகளும் உலகை வலம் வருவதை நிறுத்திக் கொண்டாலே கோடிக் கணக்கான ரிங்கிட்டை சேமித்து பி40 பிரிவினருக்கு உதவ முடியும் என்று இரு பயனீட்டாளர் அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.
மலேசியா பயனீட்டாளர் கழகம்(ஃபோம்கா) தலைவர் N Marimuthu என். மாரிமுத்துவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் Mohideen Abdul Kadir ஆகியோர் கூறும்போது, பிரதமர் இஸ்மாயில் சப்ரி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அமெரிக்கா, பிரிட்டன், வியட்நாம், ஜப்பான், இந்தோனேசியா, புரூணை, கம்போடியா சிங்கப்பூர், தாய்லாந்து, கத்தார், அரபு சிற்றரசு, துருக்கி போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது 20க்கும் குறையாத அதிகாரிகளோடு சென்றுள்ளார்.
மேலும், அமைச்சர்கள் அஸ்மின் அலி, ஸுரைடா கமாருடின், எம்.சரவணன் ஆகியோர் வெளிநாடுகளுக்குச் செல்வதில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தற்போதைக்கு நிறுத்தி வைத்து, அதில் மிச்சப்படும் பணத்தை வசதி குறைந்த மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
