35.1 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

மனைவி, குழந்தையைக் கொலை செய்த பின்னர், கொலையாளி நிர்வாணமாகத் தப்பிச் சென்றார்

தனது மனைவியையும் 44 நாளே ஆன குழந்தையையும் கொலை செய்த பின்னர், நிர்வாணமாகத் தப்பித்து ஓடிய நபரை ஜொகூர் போலீசார் நேற்று 2.45 மணியளவில் பெர்மாஸ் ஜெயாவில் கைது செய்தனர்.
உடலில் எந்த உடையும் அணியாமல் அம்மணமாக மோட்டார் சைக்கிளில் தப்பித்து ஓடிய அவரை, தாங்கள் கைது செய்ததாக ஜொகூர் செலாத்தான் போலீஸ் தலைவர் Rauf Selamat (ரவுப் செலாமாட்) தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்கள் 26 வயதான Shaajaar Nurshahirim Rosman (ஹஜார் நுர்ஷாஹிரிம் ரோஸ்மான்), குழந்தை Hans Mohd Takkif Amir) ஹான்ஸ் முகமட் தக்கிஃப் அமீர் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்களிருவரின் கழுத்துகள் கத்தியால் அறுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
கொலையுண்ட இருவரின் உடல்கள் உடல்கூறு பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles