பெர்சத்துவுக்கு துணைப் பிரதமர் பதவியை முஹிடின் யாசின் கேட்பது நியாயமே என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் Wan Saiful Wan Jan தெரிவித்தார்.
நஜிப் ரசாக்கும் அம்னோ தலைவர் அமாஸ் ஸாஹிட் ஹமிடியும் ஊழலில் திளைத்து தங்களை வளமாக்கிக் கொண்ட வேளையில், கோவிட் பெருந்தொற்றின் காலத்தில் முஹிடினின் சேவை அளப்பரியது என்றும், அவர் சேவையில் உயர்ந்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் தமது ஆதரவாளர்களோடு அம்னோவில் இணைய விரும்புவதைத் தடுக்கவே, அப்பதவியை முஹிடின் வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது.