
அரசாங்கத் துறையில் 4 நாள் வேலை என்பது இப்போதைக்கு தேவையற்றது என்று அரசுத் துறை சார்ந்த சங்கங்களின் சம்மேளனமான கியூபெக்ஸின் தலைவர் Adnan Mat தெரிவித்தார்.
தொழிலாளர்கள் எதிர்நோக்கும், இன்னமும் தீர்க்கப்படாத குறைந்தபட்ச சம்பளம், எடுக்கப்படாத விடுமுறைக்கான சம்பளம், பதவி உயர்வு போன்ற விவகாரங்களுக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
வேலை நாள்களை நான்காகக் குறைத்தால், அது பொதுமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவ்தோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
