
கெடா, பாலிங் வெள்ளத்திற்குக் காரணமான மூசாங் கிங் டுரியான் பழத் தோட்டம்தான் காரணம் என கூறப்படும் வேளையில், அத்திட்டத்தில் ஊழல் நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட கெடா ஊழல் தடுப்பு இயக்குநர் Shaharom Nizam Abd Manap ஷாரோம் நிஷாம் அப்துல் மனாப், தற்போது அது பற்றிய தகவல் ஆவணங்கள் முதலியவற்றின் சேகரிப்பு நடைபெறுவதாகவும், ஆய்வில் ஊழல் நடந்திருக்கும் தடயம் இருப்பின் சம்பந்தப்பட்டோரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று தெரிவித்தார்.
பாலிங்கில் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு குனோங் இனாஸில் உருவாக்கப்படும் டுரியான் தோட்டம்தான் காரணம் என்றும் அதனை விசாரணை செய்ய வேண்டுமென்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
