
எங்களைச் சிலர் ரத்தம் உறுஞ்சும் பேய்கள், கோழிகளைப் பதுக்கி வைத்து, விலையை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டுவோர், கோழி வளர்ப்பில் ஈடுபட வேண்டுமென மலேசிய கால்நடை வளர்ப்போர் கூட்டமைப்பின் ஆலோசகர் ஜெஃப்ரி இங் சவால் விடுத்தார்.
நாங்கள் சாதாரணமானவர்கள். தர்மம் செய்ய இத்தொழிலில் ஈடுபடவில்லை. கோழிகளைப் பதுக்கி வைத்து எதுவும் செய்ய முடியாது. அவற்றிற்கு வெறுமனவே தீணி போட முடியாது. கோழிகள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டுமே அவற்றை விற்க முடியும். எடை கூடி, அவற்றை விற்றால் பதில் சொல்லியாக வேண்டும்.
இக்கட்டான சூழ்நிலையில் இத்தொழிலில் நட்டத்திற்கு நடத்த முடியாது. சந்தையை நாங்கள் கெடுப்பதாகக் கூறுவதில் நியாயம் இல்லையென்றும், கோவிட் தொற்றுக்குப் பின்னர், கோழியின் தேவை அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
