25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 49

நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்றும் 2030இல் இந்தியா சீனாவை மிஞ்சும் என்றும் ஐநா கணித்துள்ளது.
1950 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருவதாகவும் அது 2030ஆம் ஆண்டில் 850 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஐநாவின் பொருளாதார சமூக விவகாரங்களுக்கான பிரிவு குறிப்பிட்டுள்ளது.
2030இல் 850 கோடி, 2050இல் 997 கோடி, 2080இல் 1,040 கோடி என உலக மக்கள் தொகை அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் தான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் என்றும் மேற்கத்திய நாடுகளில் மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்றும் கணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles