25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதில் தோல்வியே மணவிலக்கிற்கு முக்கிய காரணமாகும்

🔥 Views : 7
👁 Reading Now : 69

இந்த நவீன காலகட்டத்தில் தம்பதியினரிடையே மண விலக்குகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.
பிரிச்சினைகளைத் தீர்ப்பதற்கு மண விலக்குதான் இறுதியானது என எண்ணுவது தவறு என்று மலேசிய கடும்பம் எனும் அமைப்பின் தலைவர் லீ வீ மின் குறிப்பிட்டுள்ளார்.
நிதிப் பிரச்சினை, புரிந்துணர்வு இல்லாமை போன்ற காரணங்களினாலும் மணவிலக்குகள் நேர்கின்றன.
2020 மார்ச்சில் இருந்து 2021 ஆகஸ்ட் வரை நாள் ஒன்றுக்கு 140 மணவிலக்கு மனுக்கள் பெறப்பட்டதாகவும் அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தம்பதியர் 66,440 பேரும் முஸ்லிம் அல்லாதோர் 10,346 பேரும் மனம் விலக்கிற்கு விண்ணப்பித்து உள்ளதாகத் தெரிகிறது.
மணவிலக்கு விவகாரங்களில் பெரிதும் பாதிக்கப்படுவது தம்பதியரின் பிள்ளைகள் ஆகத்தான் இருக்க முடியும்.
அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் நம்மை வலுவுள்ளவர்களா ஆக்கும் என்பதை தம்பதியர் உணர வேண்டும். பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதால் வாழ்வு சிறக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles