25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

உதவிநிதி வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் கடத்தலுக்கு நடவடிக்கை நிச்சயம்

🔥 Views : 6
👁 Reading Now : 50

அரசின் நிதி உதவி பெற்ற சமையல் எண்ணெய் அண்டை நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டு அங்கே கிலோ ஒன்றுக்கு 7இல் இருந்து 8 ரிங்கிட்டாக விற்கப்படுவது அறியப்பட்டுள்ளதாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஜிஹாத் அமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெட்டிகள் பிரிக்கப் படாமலேயே அண்டை நாடுகளுக்கு அது அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட தரப்பினர் அதில் ஈடுபட்டிருப்பது தெரிய வருவதாகவும் அவர்களுக்குத் தண்டனை நிச்சயம் என்றும் இது தொடர்ந்தால், விநியோக நடைமுறையை மாற்றம் செய்யப்படும் என்று அவர் எச்சரித்தார்.
சமையல் எண்ணெய்க்கு அரசு, உதவி நிதியாக 400 கோடி ரிங்கிட்டை செலவழிக்கும் வேளையில், அதனை அண்டை நாட்டு மக்கள் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அனுவார் மூசா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles