
மாட் ரெம்பிட் எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்வோர் பொதுமக்களின் பாதுகாப்பிற்குக் கடும் மிரட்டலாக இருப்பதால், அவர்களுக்குக் கடும் தண்டனைய விதிக்க வேண்டுமென Lim Guan Eng (லிம் குவான் எங்) கேட்டுக் கொண்டார்.
அண்மையில் பினாங்கில் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையில் மாட் ரெம்பிட்டால் ஐவர் பலியானதைச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்குக் குடிபோதையில் காரோட்டி விபத்தை ஏற்படுத்துவோருக்குத் தரப்படுவது போல 1,000லிருந்து 5,000 ரிங்கிட் வரையிலான அபராதமும் ஈராண்டுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் அளிக்க வெண்டுமென குவான் எங் கேட்டுக் கொண்டார்.
