ஜொகூர் எண்டாவ் பகுதியில் ஜொகூர் சுல்தான், Sultan Ibrahim Iskandar (சுல்தான் இப்ரஹிம் இஸ்கண்டாரின்) செம்பனைத் தோட்டத்தை உருவாக்க 3,775 ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும் பரப்பிலான காடுகளை அழித்து செம்பனைத் தோட்டத்தை அமைக்க சுற்றுச்சூழல் அறிக்கை பெறப்படுவதற்கு முன்னரே, இந்தக் காடழிப்பு வேலைகள் தொடங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இயற்கை வளமும் காட்டு விலங்குகள் தங்க இடமும் இல்லாமல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காட்டை அழித்த ஏஏ சாவிட் நிறுனத்தின் பெரும்பான்மை பங்குகளை சுல்தானும் அவரது புதல்வரும் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.