
எதிர்க்கட்சி பெண் எம்பிக்களைத் தகாத, கொச்சை வார்த்தைகளால் திட்டிய பாசிர் சாலாக் எம்பி Tajudin Abdul Rahman (தாஜுடின் அப்துல் ரஹ்மான்) கடந்த வாரம் பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தார்.
அவருக்குத் தண்டனையாக இரு நாள்களுக்கு மக்களவையிலிருந்து விலக்கி வைத்ததை கடுமையாக விமர்ச்சித்த பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு அவையிலிருந்து வெளியேறும்படிம் பணிக்கப்பட்டார்.
அவர் அவையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், தாஜுடின் அந்தத் தகாத வார்த்தைகளைப் பேசும்போது, எல்லா ஒலிபெருக்கிகளும் முடக்கப்பட்டதாகவும் தாஜுடின் தகாத வார்த்தகளைச் செவிமடுத்திய 9 பேர் சாட்சிகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தாஜுடினுக்கு ஆதரவு காட்டும் அம்னோவினர் மக்களவை உறுப்பினருக்குத் தகுதியானவர்கள் இல்லையென்றும் கஸ்தூரி குறிப்பிட்டார்.
