34.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சம்பளத்தை உயர்த்தாவிடில் அரசு ஊழியர்கள் வீதி ஆர்பாட்டங்கள் நடத்தப்படும்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தாவிட்டால் அவர்கள் வீதி ஆர்ப்பட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுவர் என அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான CUEPECS (கியூபெக்ஸ்)+ எச்சரித்துள்ளது. கிரேட் 19லிருந்து 29 வரைக்குமான ஊழியர்களின் சம்பளத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென பல முறை வலியுறுத்திய போதும், அரசு மெளனம் காப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர் சம்பள உயர்வை அரசு அளிக்க வேண்டும். தவறினால், வீதி ஆர்ப்பட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். விலைவாசியையும் பணவீக்கத்தையும் எதிர்கொள்ள அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை ரிம. 1,800ஆக அதிகரிக்க வேண்டுமென்றும் அட்னான் மாட் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles