
கோவிட் 19 நோயின் தாக்கத்தினால் கடந்த இரண்டாண்டுகள் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது என்பது உண்மை. இதற்கு மேலும் சிறமத்தைத் தந்தது அல்லது தந்து கொண்டிருப்பது பொருட்களின் கட்டுக்கடங்காத விலை ஏற்றம் !. ஒவ்வொரு வாரமும் வீட்டுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சமையல் எண்ணை, முட்டை மற்றும் உணவுக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வுக்கு அதன் விற்பனையாளர்கள் மொத்த வியாபாரிகளை காரணம் காட்டுகின்றனர். உறுப்பத்தியாளர்களிடம் போதுமான தானியங்கள் இல்லாததால் அதனை ஈடு செய்வதற்கு இடைத் தரகர்களான மொத்த வியாபாரிகள் விலையை உயர்த்துகின்றனர் என்று கூறுகின்றனர்.

இதற்கு முன்மாதரியாக சமையல் எண்ணையை காட்டுகின்றனர். அதன் உற்பத்திக் குறைவினால் அதிக விலை கொடுத்து வாங்கி அதை சந்தையில் வந்து சேர்ப்பதினால் தான் அதனை கூடுதல் விலையில் விநியோகிக்க வேண்டி வருகிறது என்று காரணம் கூறுகின்றனர். ஆனால் மக்களின் குறைபாடுகள் என்ன வென்றால் உணவு உற்பத்திக்கூடங்களுக்கும், உணவகங்களுக்கும் மற்றும் சிறு உணவு வியாபாரிகளுக்கும் சமையல் எண்ணை தாராளமாகக் கிடைத்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த உணவுக் கூடங்கள் தங்களின் தேவைக்கு மிஞ்சிய எண்ணையை மறு சுழர்சி செய்து அதை சந்தையில் அதிக விலையில் விற்று வருதாக கூறுகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் அவைகளை பக்கத்து நாடுகளுக்கு கள்ளத்தனமாக கடத்திச் சென்று கூடுதல் லாபத்துடன் விற்று வருவதாக குறைப்பட்டு கொள்கின்றனர்.
மேலும் மக்களின் குற்றச்சாட்டு என்னவென்றால் – ஒரு சில மொத்த வியாபாரிகள் அரசாங்க கட்டுப்பாட்டு விலையான ஒரு கிலோவுக்கு ரிங்கிட் 2.50க்கும் மேலான விலையில் வழங்கி வருவதாகக் தெரிகிறது என்று கூறுகின்றனர்.
இது போன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பினாங்கு இந்து இயக்கம் சில B40 எனும் ஏழைக் குடும்பங்களின் பகுதிகளான ரைபில் ரேஞ், மெக்கலம் சாலை, ஜைனுடின் சாலை மற்றும் பார்லிம் ஆயர் ஈத்தாம் அடுக்கு மாடி குடியிருப்புக்களுக்கும், பட்டர்வொர்த் மற்றும் புக்கிட் மெர்தாஜாம் அடுக்கு மாடி வீடுகளுக்கும் சென்று அங்கு குடும்ப மாதர்களிடம் விசாரித்ததில் “கடைகளில் எண்ணை பாக்கெட்டுகளை கண்ணால் கூட காண முடியவில்லை” என்று புலம்புகின்றனர். “அப்படியே கடைகளில் வைத்திருந்தாலும், நல்ல தரமுள்ள தரத்திலான உயர் ரக எண்ணை கிலோ ஒன்றுக்கு 8 அலலது 9 ரிங்கிட்டிலான எண்ணை பாட்டில்களை வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்படுதாக” வருத்தப்படுகின்றனர். கட்டுப்பாட்டு உள்ள எண்ணைப் பாக்கெட்டுகளை கிலோ ஒன்றுக்கு 3 அல்லது 3.50 ரிங்கிட் கொடுத்து வாங்க வேண்டும் என்று அழுகின்றனர். இதற்கு மேலும் அச் சந்திப்பில் அதிர்ச்சி தரும் விபரம் என்னவென்றால்! இது போன்ற ஏழைக் குடும்பங்கள் தாங்கள் உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் உபயோகித்து வருவதாகத் தெரிகிறது. மேலும் சில சமயம் உணவு வகைகளை பொரியல் செய்து அதை வைத்திருந்து பல வேளைகளில் மீண்டும் உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதிலும் அந்த எண்ணை கண்ணங்கருப்பான பிறகும் உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டது !. பொதுவாகவே சமையல் எண்ணையை ஒரு முறை பாவித்தப் பிறகு அதை மீண்டும் உபயோகிப்பது ஆரோக்கியமற்றது என்பது உண்மை. நாட்டில் தற்போது அதிக பேர்களுக்கு ‘புற்று நோய், இருதய பலவீனம் மற்றும் மூச்சடைப்பு’ நோய்கள் பெருகி வருவதன் காரணம் இது வாகத்தான் உள்ளது. இது போன்ற உபயோகிப்பு உணவுக் கடைகளில் அதிகம் காண முடியும். ஆகவே, பினாங்கு இந்து இயக்கம் சம்பந்தப்பட்ட இலாக்காவின் அதிகாரிகள் உடனடியாக விலைக் கட்டுப்பாடு போன்ற விலைகளில் எண்ணை விற்கப்படுகிறதா ? என்று தீவிர சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக வந்து சேர வேண்டும். இங்கே பற்றாக்குறைவாக உள்ள மீன் வகைகளை ஏன் சிங்கப்பூருக்கு அனுப்பி அதன் பின் வெளி நாடுகளுக்குச் சென்றடைய வேண்டும்?.

நமக்கே ஒரு வருடத்திற்கு மீன் வகைகளில் ரிங்கிட் 10 கோடி தேவைப் படுகிறது. சன் நிறுவன அலசல்படி மீன் வலமுள்ள துறையின் உயர் பொது அதிகாரி முகமது மொக்தார் மாமுது ஒவ்வொரு வருடமும் பத்து கோடி ரிங்கிடுக்கு மீன் வகைகளை கொள்முதல் செய்வதாகவும், அதிலும் பக்கத்து நாடுகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்து வருவதாகத் தெரிவித்தார். இதில் பதனிக்கப்பட்ட வகை மீன்களும் அடங்கும். இவ்வாறாக சில ஆண்டுகள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளது. இச் செய்தி சன் செய்தி நிறுவனம் கடந்த 30/07/22 ல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சு உணவு வகைகளை சிங்கப்பூருக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். உள்ளூர் மக்களுக்குத் தேவையை வெளிநாடுகளில் இருந்தாவது இங்கு கொண்டு வந்து முழுதும் நிறப்ப வேண்டும் என்று பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் ப.முருகையா கேட்டுக்கொள்கிறார்.
