
எனக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாராவை நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சட்டரீதியில் சந்திப்பேன்.
நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சவால் விடுத்தார்.
நாட்டில் நோய்த்தொற்று தாக்கத்தின் போது வெளிநாடு சென்ற எட்மண்ட் சந்தாராவை குறைகூறியதற்காக அவர் எனக்கு எதிராக வழக்கு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் இவரின் வெளிநாடு பயணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
ஆனால் இவர் எனக்கு எதிராக மட்டுமே வழக்கு தொடுத்திருக்கிறார்.
எனக்கு எதிராக வழக்கு மனுவைத் தாக்கல் செய்த இவர் முடிந்தால் தன்னை குறைகூறிய மலேசியா மக்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
எது எப்படியாக இருப்பினும் இவர் வழக்கை கண்டு நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன்.
எனக்கு நெருக்குதல் கொடுக்க இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன்.
நான் எந்தக் காலகட்டத்திலும் அஞ்சி ஒடுபவன் அல்ல.
அவரை நேருக்கு நேர் நீதிமன்றத்தில் சட்டரீதியில் சந்திப்பேன் என்று பிரபாகரன் சவால் விடுத்தார்.
