
பெர்சத்துவுக்கு துணைப் பிரதமர் பதவியைத் தராவிட்டால் பெரிக்காத்தான் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுவது அதிகப்பட்சமானது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Mohamed Nazri Abdul Aziz (முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ்) சாடியுள்ளார். பெர்சத்துவுக்கு துணைப் பிரதமர் பதவியைப் பிரதமர் தராதிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் பெரிக்காத்தான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆதரவை மீட்டுக் கொண்டால் ஆட்சி கவிழும் என்று ஹிஷாமுடின் குறிப்பிட்டார். பெரிக்காத்தான் அம்னோவை சீண்டிப் பார்க்க முனையக் கூடாதென்றும் அதில் பாதிக்கப்படப் போவது பெர்சத்துவாகத்தான் இருக்குமே தவிர அம்னோவாக இருக்காது என்றும் நஸ்ரி குறிப்பிட்டார்.



