
அரசுக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவை பெர்சத்து நீக்கினால், எந்த நேரத்திலும் பொதுத்தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். அண்மைய காலமாக தனக்கு உறுதி கூறியது போல துணைப் பிரதமர் பதவியைத் தர வேண்டுமென பெர்சத்து நெருக்குதல் கொடுத்து வருகிறது. தங்களின் வேண்டுகோள் பூர்த்தி செய்யப்படா விட்டால், அரசுக்குத் தரும் ஆதரவை மீட்டுக் கொள்ளத் தயங்க மாட்டோம் என்று அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆட்சி கவிழ்க்கப்படுமானால் பொதுத்தேர்தலை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்மாயில் தெரிவித்தார்



