
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் பக்காத்தான் அம்னோவுடன் ஒத்துழைக்க வாய்ப்பு வந்தால் அது பற்றி சிந்திக்கப்படும் என்று ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார். மலேசிய அரசியலின் போக்கு மாறியுள்ளதாகவும் இனி ஒது கட்சி மட்டுமே நாட்டை ஆள முடியாத நிலையில், கூட்டு அரசாங்கமே தொடரும் என்று அவர் தெரிவித்தார். பக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராஹிம் மட்டுமே என்றும் பக்காத்தான் கொள்கைக்கு இணங்கிப் போகும் எந்தக் கட்சியோடும் கூட்டு வைக்க கலந்தாலோசிக்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.



