29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

இலகு ரக போர்க்கப்பல் விவகாரத்தில் விசாரணை முடியும் கட்டத்தில் உள்ளது

🔥 Views : 14
👁 Reading Now : 68

600 கோடி ரிங்கிட் மதிப்பிலான 6 இலகு ரக போர்க் கப்பல் விவகாரம் சம்பந்தமான அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்தார்.
அதில் சட்டத்துறை அலுவலகமும் சம்பந்தப்பட்டுள்ளதால் முடிவு தெரியும் வரை காத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். 2011இல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இம்மாத இறுதியில் 5 கப்பல்கள் வந்தடைய வேண்டிய நிலையில், இன்னும் ஒரு கப்பல் கூட வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது. நஜிப் ரசாக் பிரதமராகவும் அமாட் ஸாஹிட் ஹமிட் தற்காப்பு அமைச்சராகவும் இருந்த காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பலர் சுய லாபம் அடைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles