
ஆடவர் ஒருவர் குழந்தை ஒன்றின் வாயில் மின்னியல் சிகரெட்டை திணித்து புகைக்க வைத்த வீடியோ காட்சி வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.bஅந்த வீடியோவில் குழந்தையின் தாய் என நம்பப்படும் மாது அந்தக் குழந்தைக்கு ஊக்கம் கொடுத்து புகைக்க வற்புறுத்துவது காணப்பட் டது. இதனைக் கண்ட பல முகநூல், இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்தக் காட்சியைக் கடுமையாகத் திட்டி, தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டனர். ஒது பொறுப்பற்ற பெற்றோரின் செயல், மனிதாபிமானமற்ற செயலென்று சாடியதோடு போலீஸில் புகார் செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.



