
அண்மையில் ஈப்போவுக்கு அருகில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மரணமடைந்த ஃபாஜிம் ஜுஃப்பா முகமட் முஸ்தாஃபா கமாலின் குடும்பத்துக்கு அவருக்கான மாத சொக்சோ உதவி நிதியாக ரிம, 3,555 வழங்கப்பட்டது. சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரியான Azman Aziz Mohd (அஸ்மான் அஸிஸ் முகமட்) அந்நிதியை விமானியின் துணைவியார் ஹயாத்தி நாவி (50) என்பவரிடம் வழங்கினார். ஈமச் சடங்கு நிதியாக ரிம. 2,000மும் அவரிடம் வழங்கப்பட்டது. மாதாந்திர இந்த நிதியானது ஹயாத்தி உயிர் உள்ள வரையிலும் வழங்கப்படும், மேலும் அவரின் மகள் ஃபத்தினா நாடியா குயிஸ்டினா (17) என்பவர் 21 வயது வரைக்கும் அல்லது அவர் முதல் பட்டப்படிப்பை முடிக்கும் வரை பெறுவார்.



