31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

1MDB- யைப் போன்றதொரு மேலுமொரு பெரிய மோசடி ; ரஃபிசி அம்பலம்

🔥 Views : 6
👁 Reading Now : 46

1MDB – யைப் போன்று, நாட்டின் மேலுமொரு மிகப் பெரிய மோசடி சம்பவத்தை அம்பலப்படுத்தப் போவதாக கூறியிருக்கின்றார் PKR -ரின் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி. 900 கோடி ரிங்கிட் மதிப்பில் 6 போர் கப்பல்களை நிர்மாணிக்கும் LCS திட்ட மோசடி குறித்து, இன்னும் ஒரு மாதத்தில் ஒவ்வொன்றாக தாம் வெளிச்சத்துக்கு கொண்டுவர விருப்பதாக, அவர் கூறியிருக்கின்றார். LCS திட்டத்திற்கு, அரசாங்கம் இதுவரை 600 கோடி ரிங்கிட் வரை செலுத்தியிருப்பதாகவும், ஆனால் இன்றுவரை அத்திட்டத்தின் கீழ், ஒரு போர் கப்பல் கூட நிர்மாணிக்கப்படவில்லை என PAC தேசிய கணக்காய்வு செயற்குழுவின் தலைவர் Wong Kah Woh கூறியிருந்தார். இந்நிலையில், அத்திட்டத்தை பாக்காத்தான் ஹரப்பான் தாமதப்படுத்தியதாகவும் , 2019 -இல் அத்திட்டத்தை முழுமையாக முடக்கி வைத்ததாகவும் நஜீப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles